ரஷ்யாவில் உள்ள வாலிபர் ஒருவர் தன்னுடைய உடலில் நெருப்பை மூட்டிக்கொண்டு எரியும் உடலுடன் ஐந்து மாடி கட்டிடத்தில் இருந்து குதித்துள்ளார். இதுபோன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடக்கூடாது என ரஷ்ய போலீஸார் அந்த வாலிபரை எச்சரித்துள்ளனர்.
ரஷ்யாவின் உள்ள சைபீரியா மாகாணத்தில் உள்ள பார்னால் என்ற நகரத்தில் சான்யா என்ற வாலிபர் தனது நண்பர்கள் உதவியுடன் தனது உடலுக்கு நெருப்பு வைத்துக்கொண்டு எரியும் உடலுடன் ஐந்தாவது மாடியில் இருந்து பனிக்கட்டிகள் நிறைந்த தரைத்தளத்திற்கு குதித்துள்ளார். இதனால் அவருக்கு எவ்வித ஆபத்தும் நேரவிலை என்றாலும் போலீஸார் அவரை எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து சான்யா கூறும்போது. ‘தான் சிறுவயது முதலே இதுபோன்ற கிக்கான செயல்களை செய்து வருவதாகவும், போதுமான பயிற்சி எடுத்து செய்வதால் இதுவரை எவ்வித ஆபத்தும் நேரவில்லை என்று கூறியுள்ளார்
[embedplusvideo height=”300″ width=”500″ editlink=”//bit.ly/1n5rSx9″ standard=”//www.youtube.com/v/SR5TEfX8SZY?fs=1″ vars=”ytid=SR5TEfX8SZY&width=500&height=300&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=¬es=” id=”ep4090″ /]
Leave a Reply
You must be logged in to post a comment.