shadow

shadow

ரஷ்யாவில் போலீஸார்களின் கண்களில் மண்ணைத்தூவி நிர்வாண சலூன் நடத்தி வந்தவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

ரஷ்யாவில் உள்ள மாஸ்கோ நகரில் ஒரு சலூன் இயங்கி வந்தது.இந்த சலூனில் எப்பொழுதும் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த சலூனில் முடி வெட்டுவதற்காக பலர் மணிக்கணக்கில் வரிசையில் நின்று காத்திருப்பார்கள். ஆனால் அதே நேரத்தில் அடுத்த தெருவில் இருக்கும் ஒரு சலூனில் கூட்டமே இல்லாமல் காலியாக இருக்கும்.

இந்நிலையில் இந்த குறிப்பிட்ட சலூனில் மட்டும் கூட்டம் அதிகமாக வருவதற்கு என்ன காரணமாக இருக்கும் என சந்தேகம் அடைந்த ரஷ்ய போலீஸார் நேற்று திடீரென அந்த சலூனில் நுழைந்து ரெய்டு செய்தனர். அப்போது அந்த சலூனில் பணிபுரியும் பெண்கள் அனைவரும் உடைகளே அணியாமல் நிர்வாணமாக முடிவெட்டி கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அப்போதுதான் அந்த சலூனுக்கு கூட்டம் ஏன் அதிகமாக வந்தது என்பது போலீஸார்களுக்கு தெரியவந்தது.

பின்னர் இதுகுறித்து விசாரணை செய்த போலீஸார் சலூன் உரிமையாளர், சலூனில் பணிபுரிந்தவர்கள் அனைவரையும் கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். தற்போது அந்த சலூன் பூட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

Leave a Reply