shadow

ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு திடீர் ஒத்திவைப்பு: என்ன காரணம் நாளை?

தமிழகத்தில் உள்ள 44 இடங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு நடத்தப்பட இருந்த நிலையில் திடீரென ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

உயர்நீதிமன்றம் இன்று அளித்த உத்தரவில் நான்கு சுவர்களுக்குள் தான் அணிவகுப்பு நடத்த வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் பொது இடங்களில் அணிவகுப்பு நடத்த கூடாது என்று உத்தரவிட்டு உள்ளது

இதனை அடுத்து நான்கு சுவர்களுக்குள் நடத்த நீதிமன்றம் கூறியிருப்பது ஏற்புடையது அல்ல என்றும் மற்ற மாநிலங்களில் பொதுவெளியில் தான் அணிவகுப்பு நடைபெற்று வருகிறது என்றும் இதனால் மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தென்மண்டல மேலாளர் தெரிவித்துள்ளார்
இதனையடுத்து ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது