shadow

ரூ.81 கோடிக்கு வியாபாரம் ஆன ரஜினியின் ‘2.0

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘2.0 திரைப்படத்தின் சாட்டிலைட் வியாபாரம் ஏற்கனவே ரூ.110 கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ள நிலையில் தற்போது ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் உரிமை ரூ.81 கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. எனவே இதுவரை சுமார் ரூ.200 கோடிக்கு வியாபாரம் ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் தமிழகம், கேரளா, கர்நாடகா, மற்றும் இந்தி உரிமை, வெளிநாட்டு உரிமை என பல வியாபாரங்கள் மீதம் இருப்பதால் இந்த படத்தின் மொத்த வியாபாரம் ரூ.600 கோடியை தாண்டும் என்று கூறப்படுகிறது.

ரூ.450 கோடி பட்ஜெட்டில் தயாராகி வரும் இந்த படம் மிகப்பெரிய லாபத்தை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *