ஆதார் அட்டையை இணைக்காவிட்டால் ரூ.6000 கிடையாது.. அதிரடி அறிவிப்பு

ஆதார் அட்டையை இணைக்காவிட்டால் ரூ.6000 கிடையாது.. அதிரடி அறிவிப்பு

ஆதார் அட்டையை இணைக்க விவசாயிகளுக்கு ரூ.6000 உதவித்தொகை கிடையாது தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ 6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் ஆதார் எண்ணை இணைக்காத சுமார் 9 லட்சம் விவசாயிகள் ரூபாய் 6000 உதவித்தொகை இன்னும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே உதவித்தொகை விவசாயிகளுக்கு கிடைக்கும் என வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.