சென்னைக்கு வந்தது புதிய ரூ.500 நோட்டு. பழக்கத்திற்கு வருவது எப்போது?

சென்னைக்கு வந்தது புதிய ரூ.500 நோட்டு. பழக்கத்திற்கு வருவது எப்போது?

500-currencyசெல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்களுக்கு பதிலாக தற்போது வங்கிகளில் ரூ.2000 நோட்டு மட்டுமே மாற்றி தரப்படுகிறாது. இதனால் பொதுமக்கள் சில்லரை மாற்ற சிரமப்படுகின்றனர். அத்தியாவசிய பொருட்களை பணம் இருந்தும் வாங்க முடியாத நிலை உள்ளது. இதற்கு ஒரே தீர்வு ரூ.500 பழக்கத்திற்கு வந்தால் மட்டுமே என்று கூறப்படும் நிலையில் கடந்த வாரமே வட இந்தியாவுக்கு ரூ.500 நோட்டு பழக்கத்திற்கு வந்துவிட்டது.

இந்நிலையில் சென்னை உள்பட தென்மாநிலங்களுக்கு எப்போது புதிய ரூ.500 நோட்டு வரும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் சென்னைக்கு ரூ.500 நோட்டு வந்துவிட்டதாக ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று அல்லது நாளை முதல் சென்னை உள்பட தமிழகத்தில் ரூ.500 நோட்டு வங்கிகளில் கிடைக்கும் என்றும் இதனால் அதிகபட்சம் இந்த வாரத்திற்குள் நிலைமை சீராகிவிடும் என்றும் அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாசிக்கில் இருந்து புதியதாக வந்துள்ள ரூ.500 நோட்டை பார்க்க சென்னை மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.