அதிர்ச்சியில் பொதுமக்கள்

கடந்த ஒன்றரை மாதங்களாக கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து நாடு முழுவதும் மதுக்கடைகள் மூடப்பட்டு இருந்தன என்பது தெரிந்ததே இதனால் மது பிரியர்கள் மற்றும் மதுவுக்கு அடிமையானவர்கள் சிக்கலில் இருந்தனர்

ஒரு சிலர் மாற்று ஏற்பாடுகளை குடித்து உயிரை இழந்தும் ஒருசிலர் கள்ளச் சாராயத்தை குடித்து வந்த செய்திகளும் அவ்வப்போது வெளியானது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் நேற்று முதல் கர்நாடகா தெலங்கானா உள்ளிட்ட ஒருசில மாநிலங்களில் மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன. இதனை அடுத்து மதுக்கடைகள் முன் நீண்ட வரிசையில் மது பிரியர்கள் மதுபாட்டில்களை வாங்க கூடி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கர்நாடக மாநில அரசு அளித்த தகவலின்படி நேற்று ஒரே நாளில் கர்நாடகத்தில் ரூபாய் 45 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஊரடங்கு நேரத்தில் பொதுமக்கள் கையில் காசில்லாமல் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் இருக்கிறார்கள் என்று கூறப்பட்டு வரும் நிலையில் ஒரே நாளில் 45 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply