ரூ.4 கோடி கொடுத்தால் சந்தோஷப்படுவேன். சன்னிலியோன்

ரூ.4 கோடி கொடுத்தால் சந்தோஷப்படுவேன். சன்னிலியோன்

ஷாருக்கான் நடித்துள்ள ‘ரயீஸ்’ என்ற படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ள பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோனுக்கு ரூ.4 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாக கடந்த சில நாட்களாக வதந்திகள் பரவி வருகின்றது.

புத்தாண்டு கொண்டாட்ட விழாவில் நடைபெறுவதாக அமைக்கப்பட்ட ‘லைலா மெயின் லைலா’ என்ற பாடலுக்கு ஷாருக்கானுடன் சன்னிலியோன் ஆடியுள்ள இந்த பாடலுக்குத்தன அவருக்கு ரூ.4 கோடி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பாடல் ஒரே நாளில் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இதுகுறித்து கருத்து கூறிய சன்னிலியோன் ‘இந்தச் செய்தி உண்மையாக இருக்கவேண்டும் என்று நம்புகிறேன். என்னுடைய பாடலை மேடையிலும் ஆடுவதற்காக ரூ. 4 கோடி வழங்கப்படுகிறது என்றால் இந்தப் பூமியிலேயே சந்தோஷமான நபர் நானாகத்தான் இருப்பேன். ஆனால் இந்த செய்தியில் உண்மையில்லை என்று கூறியுள்ளார்.

Leave a Reply