படிக்கும்போதே மாதம் ரூ.1000 உதவித்தொகை: மத்திய அரசின் அறிவிப்பால் 9-12 ஆம் வகுப்பு மாணவர்கள் குஷி

9ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு படிக்கும்போதே மாதம்தோறும் ரூபாய் 1000 உதவித்தொகை வழங்கப்படஉள்ளது.

9- 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர் இந்த உதவித்தொகையை பெற தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும்.

மார்ச் மாதம் 5-ஆம் தேதி இந்த தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு இம்மாதம் 27ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்ய வேண்டிய இணையதள முகவரி: http://dge.tn.gov.in