shadow

பெண் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ரூ.1 லட்சம்: அதிரடி அறிவிப்பு

பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஒரு லட்சம் மானியம் வழங்கப்படும் என அமைச்சர் சி வி கணேசன் தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட அவர் பெண் ஆட்டோ ஓட்டுநர்கள் சொந்தமாக ஆட்டோ வாங்குவதற்கு ஒரு லட்ச ரூபாய் மானியம் வழங்கப்படும் என்று கூறினார்.,

மேலும் இதற்காக தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து தமிழக அரசுக்கு பெண் ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர்.