கொரோனா மருத்துவ வசதிக்காக ரூ.1 கோடி: தமிழக காங்கிரஸ் அறிவிப்பு

கொரோனா மருத்துவ வசதிக்காக ரூ.1 கோடி: தமிழக காங்கிரஸ் அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ வசதி செய்வதற்காக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மக்களவை உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ரூபாய் 1 கோடி வழங்குவதென முடிவு செய்யப்பட்டுள்ளது என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கேஎஸ் அழகிரி அவர்கள் அறிவித்துள்ளார்.

மேலும் தமிழக சட்டமன்றத்தில் உள்ள 7 காங்கிரஸ் உறுப்பினர்களும் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கணிசமான தொகையினை வழங்குவார்கள் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே அதிமுக எம்பி ரவீந்திரகுமார், தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ வசதி செய்வதற்காக ரூ.1 கோடி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

 

 

Leave a Reply