shadow

இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் நடித்த ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்த படத்தின் டிரைலர் டிசம்பர் 3ஆம் தேதி வெளியாகும் என கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென டிரைலர் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது ’ஆர்.ஆர்.ஆர்’ டிரைலர் டிசம்பர் 9ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் தேஜா, அஜய்தேவ்கான், ஆலியாபட், ஒலிவியா மோரிஸ், சமுத்திரக்கனி, ஸ்ரேயா சரண் உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் சுமார் 400 கோடியில் தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.