டுவிட்டரில் தனுஷ்-விஷால் குறித்த எழுந்த வதந்தி

டுவிட்டரில் தனுஷ்-விஷால் குறித்த எழுந்த வதந்தி
dhanush
கடந்த ஞாயிறு அன்று சென்னையில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. கமல், ரஜினி கலந்த கொண்டபோதிலும் இந்த போட்டியில் எதிர்பார்த்த கூட்டம் வராததால் நஷ்டம் அடைந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தனுஷ் ‘நட்சத்திர கிரிக்கெட் போட்டி தோல்வி அடைந்ததற்கு தமிழக மக்களே முழு பொறுப்பு என்று கூறியதாகவும், நட்சத்திர போட்டியை பார்க்க வராத தமிழக மக்களை இம்சை செய்ய சீரியல் வடிவில் நாங்கள் மீண்டும் வருவோம்’ என்று விஷாலும் கூறியதாகவும் டுவிட்டரில் செய்தி வெளியானது.

ஆனால் தனுஷ் இந்த செய்தியை உடனடியாக மறுத்துள்ளார். தன்னுடைய பெயரில் யாரோ சிலர் இந்த கருத்தை தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார். விஷால் நேரடியாக மறுப்பு தெரிவிக்கவில்லை எனினும் அவரது தரப்பில் இருந்து இந்த தகவல் பொய்யானது என்று கூறப்பட்டுள்ளது.

நட்சத்திர கிரிக்கெட் போட்டியால் சன் டிவி கொடுத்த ரூ.9 கோடி நன்கொடையுடன் ரூ.13 கோடி வசூல் ஆனதாகவும், இந்த போட்டியால் நஷ்டம் எதுவும் இல்லை என்றும் நடிகர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply