சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ரோஜர் பெடரர் ஓய்வு

சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ரோஜர் பெடரர் ஓய்வு

அடுத்த வாரம் நடைபெறவுள்ள லேவர் கோப்பை டென்னிஸ் தொடருக்குப் பிறகு ஓய்வு பெற இருப்பதாக ரோஜர் பெடரர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் தனது 41 வயதில், டென்னிஸ் விளையாட்டை விட்டு வெளியேறுவதற்கான நேரம் வந்துவிட்டது என்று தான் உணர்கிறேன் என தெரிவித்துள்ளார்.

20 கிராண்ட்ஸ்லாம்களை வென்ற, ரோஜர் அடுத்த வாரம் நடைபெறும் லேவர் கோப்பை தான் அவர் பங்கேற்கும் கடைசி போட்டிகள் என்பது குறிப்பிடத்தக்கது.