shadow

rohit sharmaநேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் இலங்கை இடையிலான 4வது ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் ரோஹித் சர்மா 264 ரன்கள் எடுத்து உலக சாதனை புரிந்தார். நேற்றைய போட்டியில் இவர் ஒருவர் எடுத்த ரன்களை கூட இலங்கை அணியினர் மொத்த பேட்ஸ்மேன்களும் சேர்ந்து எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். துவக்க ஆட்டகாரர்களாக களமிறங்கிய ரஹானே மற்றும் ரோஹித் சர்மா முதலில் நிதானமாகத்தான் ஆடினர்.

13 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 59 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த இந்திய அணி, பின்னர் ரோஹித் சர்மாவின் அதிரடி ஆட்டத்தால் ஸ்கோர் எகிறியது. ரோஹித் சர்மா நேற்றைய போட்டியில் 173 பந்துகளில் 264 ரன்கள் எடுத்து உலக சாதனை செய்தார். இதுவரை ஒருநாள் போட்டியில் எந்த ஒரு பேட்ஸ்மேனும் இவ்வளவு ரன்கள் அடித்ததாக சரித்திரம் இல்லை.

இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 404 ரன்கள் குவித்தது. விராத் கோஹ்லி 66 ரன்கள் எடுத்தார்.

405 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய இலங்கை அணி, 43.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 251 ரன்கள் மட்டுமே எடுத்த இலங்கை அணி 153 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

ரோஹித் சர்மா ஆட்டநாயகனாம தேர்வு செய்யப்பட்டார்.

Leave a Reply