பாறையில் வரையப்பட்ட 30,000 வருட பழமையான ஓவியம்: தெலுங்கானாவின் ஆச்சரியம்

பாறையில் வரையப்பட்ட 30,000 வருட பழமையான ஓவியம்: தெலுங்கானாவின் ஆச்சரியம்

தெலுங்கானாவில் பாறையில் வரையப்பட்ட 30 ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய ஓவியம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

தெலுங்கானா மாநிலத்தில் புவனகிரி என்ற மாவட்டத்தில் பாறையில் ஓவியம் வரைந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது

இந்த ஓவியத்தை அகழ்வாராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்ததில் 10 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வருடங்களுக்கு முந்தையதாக இருக்கும் என்று கூறியுள்ளனர்

இத்தனை ஆயிரம் ஆண்டுகளாகியும் அதில் வரையப்பட்டிருந்த ஓவியங்கள் கொஞ்சம்கூட மங்காமல் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது குதிரை உள்ளிட்ட பல விலங்குகளின் ஓவியம் அகழ்வாராய்ச்சியாளர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்