shadow

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் ரோபோசங்கர்-ஆர்ஜே பாலாஜி

1சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ் நடித்த ‘ரெமோ’ திரைப்படம் வரும் ஆயுதபூஜை தினத்தில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ள நிலையில் அவருடைய அடுத்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்டன.

இந்த படத்தை இயக்கவுள்ள இயக்குனர் மோகன் ராஜா ஏற்கனவே இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடிக்க நயன்தாரா, சினேகா, ஃபஹத் பாசில், சதீஷ், பிரகாஷ்ராஜ் ஆகியோர்களை தேர்வு செய்துள்ள நிலையில் தற்போது ரோபோ சங்கர் மற்றும் ஆர்ஜே பாலாஜி ஆகிய இருவரையும் ஒப்பந்தம் செய்துள்ளார். இவர்கள் இருவருமே சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பர்கள் மட்டுமின்றி மூவருமே தொலைக்காட்சி மற்றும் வானொலியில் இருந்து சினிமாவுக்கு வந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அனிருத் இசையில் ராம்ஜி ஒளிப்பதிவில் உருவாகவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு தேதி உள்பட அனைத்து விபரங்களும் வெகுவிரைவில் அறிவிக்கப்படவுள்ளதாக மோகன்ராஜா தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

Leave a Reply