shadow

சிகரெட் கழிவில் தரமான சாலை: லண்டன் விஞ்ஞானிகள் சாதனை

சிகரெட் பிடிப்பது உடல்நலத்திற்கு தீங்கு என்றும் சிகரெட் பிடிப்பதால் அருகில் உள்ளவர்களும் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் கூறப்பட்டு வரும் நிலையில் சிகரெட் பிடித்துவிட்டு கீழே போடும் பஞ்சின் மூலம் தரமான சாலையை அமைக்கலாம் என லண்டனை சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் நிரூபித்துள்ளார்.

சாலை அமைக்க கடுமையான கலவைப் பொருள் பயன்படுத்தப்படுகிறது. அது ஒட்டிக் கொள்ளும் தன்மையுடையது. எளிதில் தீப்பிடிக்க கூடியது.

சிகரெட் புகைத்த பிறகு பஞ்சுடன் கூடிய கழிவு துண்டுகளை கீழே வீசி விடுகின்றனர். அவை கண்ட இடங்களில் குப்பைகளாக குவிந்து கிடக்கின்றன. அவ்வாறு தூக்கி எறியப்படும் கழிவு குப்பையை ரோடு போட பயன்படுத்த முடியும் என விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

அதனுடன், ‘பாராபின் வேக்ஸ்’ எனப்படும் மெழுகு போன்ற ஒரு பொருள் மற்றும் ரசாயன பொருளுடன் சிகரெட் கழிவு துண்டுகளும் சேர்த்து கலவை தயாரிக்கப்படுகிறது. இந்த சிகரெட் கழிவு துண்டு ரோடு போட தயாரிக்கும் கலவையை கசிவதில் இருந்து தடுத்து காக்கிறது.

இதனால் போடப்படும் ரோடு பலம் வாய்ந்ததாக இருக்கும். பொதுவாக நகர்ப்புறங்களில் ரோடுகளில் இருந்து ‘தகதக’வென கடுமையான வெப்பம் வெளியாகும். ஆனால் சிகரெட் கழிவு துண்டு பயன்படுத்துவதன் மூலம் அத்தகைய வெப்பம் வெளியேறாமல் தடுக்கப்படும்.

இந்த தகவலை அறிவியல் இதழில் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சிகரெட் கழிவு துண்டுகள் மூலம் உருவாக்கப்படும் இக்கலவை மூலம் மிக குறைந்த எடையிலான பொருட்கள் தயாரிக்க முடியும் என்றும் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

Leave a Reply