shadow

ஆர்.கே.நகர் திமுக வேட்பாளர் அறிவிப்பு.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக சசிகலா அணியின் வேட்பாளராக டிடிவி தினகரன் போட்டியிடுவார் என்று சற்றுமுன்னர் அக்கட்சி அறிவித்துள்ள நிலையில் தற்போது திமுக வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். திமுக வேட்பாளராக இந்த தொகுதியில் மருதுகணேஷ் என்பவர் போட்டியிடவுள்ளார்.

ஆர்.கே நகர் திமுக பகுதிச் செயலாளராக செயல்பட்டு வரும் இவர் இதற்கு முன்னர் தேர்தலில் போட்டியிட்டதில்லை. முதல்முறையாக தேர்தலில் போட்டியிடும் இவர் டிடிவி தினகரனை தாக்குப்பிடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

ஆர்.கே நகர் தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்த சிம்லா முத்துச் சோழன் அல்லது மயூரி கணேசன் ஆகியோருக்கு திமுக வேட்பாளராகும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென அக்கட்சியின் வேட்பாளராக ஒரு புதுமுகத்தை திமுக களமிறக்கியுள்ளது.

பண செல்வாக்குள்ள் வேட்பாளர், மக்கள் செல்வாக்குள்ள் வேட்பாளர், ஜெயலலிதாவின் உறவினர் என பலத்த போட்டியை சமாளிக்க திமுக செயல்தலைவர் ஒரு புதுமுகத்தை இறக்கியுள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

Leave a Reply