ஒரே நாள் இரவில் காணாமல் போன வற்றாத ஜீவநதி. பெரும் பரபரப்பு

ஒரே நாள் இரவில் காணாமல் போன வற்றாத ஜீவநதி. பெரும் பரபரப்பு

ஒரு தமிழ்ப்படத்தில் நடிகர் வடிவேலு தன்னுடைய கிணற்றை காணவில்லை என்று போலீஸில் புகார் அளித்திருப்பார். நகைச்சுவைக்காக இந்த காட்சி எடுக்கப்பட்ட நிலையில் மெக்சிகோவில் ஒரே நாள் இரவில் ஒரு நதியே காணாமல் போயுள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.

மெக்சிகோ நாட்டில் Veracruz என்ற பகுதியில் Atoyac என்ற வற்றாத நதி கடந்த பல ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருந்தது. இந்த நதியில் உள்ள நீரின் ஆதாரத்தினால்தான் அந்த பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு திடீரென பூகம்பம் வந்ததுபோல் பயங்கர சத்தம் ஒன்று கேட்டதாக அந்த பகுதி மக்கள் கூறினர். காலையில் எழுந்து நதிப்பக்கம் சென்ற அந்த பகுதி மக்களுக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது. வற்றாத ஜீவநதியாக விளங்கி வந்த அந்த Atoyac நதியில் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து புவியியல் நிபுணர்கள் கூறுகையில் பூமிக்கு அடியில் ஏற்பட்ட திடீர் பிளவு காரணமாக நதியில் உள்ள தண்ணீர் முழுவதும் பிளவில் சென்றுவிட்டதாகவும், இதுவொரு புவியியல் மாற்றம் என்றும் கூறியுள்ளனர்.

river river1 river2 river3 river4

Leave a Reply