கர்நாடகாவில், ஆளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, அமைச்சர், சந்தோஷ் லேட் மீது கூறப்பட்ட, சட்டவிரோத சுரங்க முறைகேடுகளை அடுத்து, நேற்று இரவு அவர், தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

மாநில, தகவல் மற்றும் உள்கட்டமைப்புத்துறை இணையமைச்சராக இருந்த சந்தோஷ் லேட் மீது, சட்ட விரோத சுரங்க முறைகேடு புகார்கள் அதிகரித்ததை அடுத்து, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யுமாறு, முதல்வர், சித்தராமைய்யா உத்தரவிட்டார். இதையடுத்து, நேற்று இரவு, பெங்களூருவில், ராஜ்பவன் சென்ற சந்தோஷ், பதவியை ராஜினாமா செய்து, கடிதத்தை, கவர்னர், பரத்வாஜிடம் ஒப்படைத்தார்.

பின், நிருபர்களை சந்தித்த லேட், “”நானாகத் தான் இந்த முடிவுக்கு வந்துள்ளேன். பதவியை ராஜினாமா செய்ய, என்னை யாரும் நிர்பந்திக்கவில்லை,” என்றார்.

Leave a Reply