shadow

முற்றிலும் முடங்கிய மின்சாரம்: குமரிக்கு விரைந்த வெளிமாவட்ட மின் ஊழியர்கள்

குமரி மாவட்டத்தில் கோரத்தாண்டவம் ஆடிய ஓகி புயலால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. புயலின் தாக்கத்தினால் வீடுகளை இழந்த சுமார் 1400 பேர் அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் மாவட்டம் முழுவதும் நூற்றுக்கணக்கான மின்கம்பங்கள் கீழே விழுந்ததால் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மின்சேவையை சீராக்கும் பணியில் மின்வாரியம் தீவிர முயற்சி எடுத்து வருகிறது. மின் ஊழியர்களுக்கு உதவி செய்ய வெளிமாவட்டங்களில் இருந்து 2000 ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு மின்கம்பங்கள் சரி செய்யப்பட்டு வருவதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply