குடியரசு தின அணிவகுப்பில் வேலுநாச்சியார், வ.உ.சி: மத்திய அரசுக்கு பதிலடி

டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் தமிழகத்தைச் சேர்ந்த பாரதியார், வ.உ.சி. வேலுநாச்சியார் ஆகியோரின் உருவங்கள் கொண்ட அணிவகுப்பிற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் சென்னையில் இன்று நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பு விழாவில் அந்த அணிவகுப்பு ஊர்திகள் கலந்து கொண்ட

மத்திய அரசால் மறுக்கப்பட்ட பாரதியார், வ உ சிதம்பரனார், வேலுநாச்சியார் ஆகியோரின் உருவங்கள் கொண்ட ஊர்திகள்சென்னையில் குடியரசு விழாவில் இடம் பெற்றதை அடுத்து மத்திய அரசுக்கு பதிலடியாக பார்க்கப்படுகிறது.

மேலும் தந்தை பெரியார் உருவம் கொண்ட விடுதலைப் போரில் தமிழகம் என்ற அணிவகுப்பும் அதேபோல் விடுதலை போராட்டத்தில் பாடுபட்ட காமராஜர் பொன் முத்துராமலிங்கம் ராஜாஜி உள்பட பல தலைவர்களின் சிலைகள் அடங்கக்கூடிய அணிவகுப்பும் நடைபெற்றது.