shadow

‘ரெமொ’, தேவி’, ‘றெக்க’ படங்களின் ரன்னிங் டைம்

remo-rekkaசிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி, பிரபுதேவா ஆகிய மூன்று முன்னணி நட்சத்திரங்களின் படங்களான ‘ரெமோ’, ‘றெக்க’, மற்றும் ‘தேவி’ ஆகிய படங்கள் வரும் வெள்ளியன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த படங்களும் ‘யூ’ சர்டிபிகேட் பெற்றுள்ளது என்பது ஒரு முக்கிய ஒற்றுமையாகும்

இந்நிலையில் இந்த படங்களின் ரன்னிங் டைம் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’ படத்தின் ரன்னிங் டைம் 150 நிமிடங்கள் அதாவது 2 மணி 30 நிமிடங்கள் என்றும் பிரபுதேவாவின் ‘தேவி’ திரைப்படம் 138 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் 18 நிமிடங்கள் என்றும் விஜய்சேதுபதியின் ‘றெக்க’ திரைப்படம் 140 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் 20 நிமிடங்கள் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது.

ரெமோ, தேவி, றெக்க என மூன்று படங்களுமே கிட்டத்தட்ட ஒரே ரன்னிங் டைம்களை பெற்றுள்ளதோடு சரியான நீளத்தை பெற்றுள்ளதால் இந்த படங்களின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

Leave a Reply