shadow

சலூன் கடைகளை திறக்க உள்ள ரிலையன்ஸ் நிறுவனம்!

இந்தியாவில் பல தொழில்களில் ஈடுபட்டு வரும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் தற்போது சலூன் கடையை திறக்க இருப்பதாக கூறப்படுகிறது

சென்னை உள்பட இந்தியாவின் பல பகுதிகளில் கிளைகளை வைத்திருக்கும் நேச்சுரல் நிறுவனத்தின் 49 சதவிகித பங்குகளை ரிலையன்ஸ் நிறுவனம் வாங்க இருப்பதாக கூறப்படுகிறது.

இது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்தியா முழுவதும் 600 இடங்களில் நேச்சுரல் சலூன் செயல்பட்டு வரும் நிலையில் ரிலையன்ஸ் நிறுவனம் இந்த நிறுவனத்தை கைப்பற்றினால் சுமார் 3000 கிளைகள் அதிகபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.