shadow

 தேசிய கீதம் பாட மறுப்பவர்கள், குறுகிய மனப்பான்மை கொண்டவர்கள். உபி முதல்வர் யோகி

கடந்த சில மாதங்களாகவே தேசிய கீதம் பாட மறுப்பவர்களின் எண்ணிக்கை நாட்டில் அதிகமாகி வருவதை உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் கண்டித்துள்ளார். தேசிய கீதம் பாட மறுப்பவர்கள், குறுகிய மனப்பான்மை கொண்டவர்கள் என்று அவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாரத பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றது முதல் தேசிய கீதம் பாடுவதை பல்வேறு இடங்களிலும் கட்டாயம் ஆக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் கூட திரையரங்குகளில் தேசிய கீதம் கண்டிப்பாக இசைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இந்த நிலையில் தேசிய கீதம் பாட ஒருசிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விருப்பம் இன்றி, தேசிய கீதம் பாட சொல்வது கண்டித்தக்கது என்றும் சமூக ஆர்வலர்கள் பலர் கருத்து கூறுகின்றனர்.

இதுபற்றி உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,’’இந்தியாவை உலக அளவில் பெரும் பொருளாதார சக்தியாக வளர்த்தெடுக்க பாடுபட்டு வருகிறோம். ஆனால், சிலர் இந்தியாவின் தேசிய கீதம் பாடக்கூட மறுப்பு தெரிவிக்கிறார்கள். இது மிகவும் கண்டித்தக்கது. அவர்கள் குறுகிய மனப்பான்மை கொண்டவர்கள்,’’ எனக் கூறியுள்ளார்.

Leave a Reply