183 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் கொல்லப்பட்ட பெண்ணின் உடல் அயர்லாந்தில் அடக்கம்.

irelandகடந்த 1832ஆம் ஆண்டு அயர்லாந்து நாட்டில் இருந்து ஐம்பதுக்கும் மேற்பட்டோர் அமெரிக்காவுக்கு ரெயில்வே தண்டவாளம் அமைக்கும் பணிக்காக சென்றனர். ஆனால் அவர்களில் சிலரை காலரா நோய் தாக்கியது. அவர்களுக்கு தாக்கப்பட்ட காலரா நோய், அமெரிக்க மக்களுக்கு பரவிட கூடாது என்ற எண்ணத்தில் ரயில்வே தண்டவாள வேலைக்கு வந்த ஐம்பது அயர்லாந்து நாட்டினர்களையும் அமெரிக்க அரசு கருணையின்றி கொலை செய்தது.

இந்த ஐம்பது பேர்களில் ஒருவரான 29வயது கேத்தரின் பர்ன்ஸ் என்ற பெண்ணின் உடலின் சில பகுதிகள் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அவருடைய ஆத்மா சாந்தியடைய அவரது உடலின் அந்த பகுதிகள் அயர்லாந்தில் புதைக்கப்பட வேண்டும் என அயர்லாந்து மக்கள் கருதியதால், அந்த உடல் சமீபத்தில் அயர்லாந்துக்கு கொண்டு வரப்பட்டு முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது. இந்த அடக்க நிகழ்ச்சியில் சுமார் 400 பேர் வரை பங்கேற்றனர்.

இந்த அடக்க நிகழ்ச்சியில் கேத்தரின் பர்ன்ஸ் உறவினர்கள் கலந்து கொண்டனர். 183 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தங்கள் முன்னோர் ஒருவரின் உடல் தங்கள் முன்னிலையில் அடக்கம் செய்யப்படுவது தங்களுக்கு வித்தியாசமான உணர்வை தந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply