shadow
real estateவரப்போகும் பாராளுமன்ற கூட்டத் தொடரில் ரியல் எஸ்டேட் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.ஏற்கெனவே ரியல் எஸ்டேட் துறையினர் பரிந்துரைத்த ஒற்றை சாளர அனுமதி வழங்கலுக்கு அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று கேட்டிருந்தனர். அரசு இந்த கோரிக்கையை நிலுவையிலேயே வைத்திருந்தது.
 
இந்நிலையில் மத்திய நகர்ப்பற மேம்பாடு மற்றும் வீட்டுவசதி துறை அமைச்சர் வெங்கையா நாயுடு ”இந்த பரிந்துரை குறித்து நிதியமைச்சருடம் கலந்து ஆலோசித்து உள்ளேன் எனறு அசோசம் புதுடெல்லியில் நடத்திய  ரியல் எஸ்டேட் கருத்தரங்கில் பேசும் போது தெரிவித்தார்.
 
ரியல் எஸ்டேட் கட்டுமானத் திட்டங்களுக்கு அனுமதி வழங்குவதில் சுற்றுச்சுழல் துறையின் ஒப்புதலுக்கு தான் அதிக காலம் எடுக்கிறது. இது தான் அதிக கால தாமதத்திற்கு காரணமாகவும் உள்ளது. விரைவில் இதனை மாற்ற  நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இது தவிர 2022ம் ஆண்டுக்குள் இந்தியர்கள் அனைவருக்கும் வீடு என்கிற திட்டம்  எங்களுக்கு சவாலாக காத்திருக்கிறது. இதற்கு மத்திய – மாநில அரசுகளின் ஒத்துழைப்பு என்பது மிகவும் அவசியமானதாக உள்ளது.” என்றார்.

Leave a Reply