shadow

கருணைக்கொலை சட்டம் இயற்ற தயார். சுப்ரீம் கோர்ட்டில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தது மத்திய அரசு

euthanasiaநாள்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டு இனிமேல் குணமாகவே முடியாது என மருத்துவர்கள் கைவிட்ட நிலையில் உள்ள நோயாளிகளுக்காக கருணைக் கொலை சட்டம் இயற்ற தயாராக இருப்பதாக மத்திய அரசு, டெல்லி சுப்ரீம்கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ளதாவது, ”நாள்பட்ட நோயாபால் பாதிக்கப்பட்டு, இனிமேல் குணமாக முடியாது என்ற நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுப்பெற்று வரும் நோயாளிக்கு வழங்கப்படும் சிகிச்சை நிறுத்தி அவரை உயிரிக்கச் செய்யும் கருணைக் கொலை தொடர்பாக சட்டம் இயற்ற தயாராக இருக்கிறோம். ஆனால், இந்கொலை தொடர்பான வழக்கு, உச்சநீதிமன்றத்தில் அரசியல் சான அமர்வு முன் நிலுவையில் இருப்பதால் தற்போது சட்டம் இயற்ற முடியவில்லை” எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த முடிவு தொடர்பாக மத்திய அரசு அளித்துள்ள விளக்கத்தில், ”மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட குழு, கடந்த 2014 ஜூலை முதல் 2015 ஜூன் வரை கருணை கொலை தொடர்பாக பல்வேறு விவாதங்களை மேற்கொண்டு, கருணை கொலை சட்டம் இயற்றுவது தொடர்பாக பல்வேறு பரிந்துரைகளை வழங்கியுள்ளது.

மேலும், சட்ட அமைச்சகத்துடனும் இது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இவைகளின் அடிப்படையில்தான் கருணைக் கொலை சட்டம் இயற்ற தற்போது அரசு தயாராக இருக்கிறது” எனக் கூறப்பட்டுள்ளது.

Chennai Today News: Ready to frame law on euthanasia, Govt. tells SC

Leave a Reply