shadow

பொதுமக்களிடம் இருந்து ரிசர்வ் வங்கி பணம் கேட்கின்றதா? போலி இமெயில்களால் பரபரப்பு

raguram_rajan_2673939fஅறக்கட்டளையில் உள்ள பணத்தை பெறுவதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்துமாறு ரிசர்வ் வங்கி பொதுமக்களுக்கு இமெயில் அனுப்பியதாக கூறப்படுவது வதந்தி என்றும் இத்தகைய போலி இமெயில்களை நம்பி பொதுமக்கள் பணம் கட்ட வேண்டாம் என்றும் ரிசர் வங்கியின் கவர்னர்  ரகுராம் ராஜன் கேட்டுக் கொண்டுள்ளார்

இதுகுறித்து ரகுராம் ராஜன் கூறியதாவது: அறக்கட்டளைகளில் உள்ள பணத்தை வாங்குவதற்கு ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள சலுகையை பெற குறிப்பிட்ட அளவு பணத்தை செலுத்துங்கள் என வரும் இ-மெயில்கள் ரிசர்வ் வங்கி பெயரில் பணம் செலுத்த வேண்டும் என குறிப்பிடுகின்றன. இது போன்ற போலி மெயில்கள் வந்தால் உடனடியாக புகார் அளிக்க வேண்டும் என்றும், இது போன்ற மெயில் அனுப்புபவர்கள் மீது ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறினார்.

இதுகுறித்து இமெயில்கள் தங்களுக்கு அடிக்கடி வருகிறது என்றும் ரிசர்வ் வங்கி இப்படி அறிவித்துள்ளது உண்மையா? என்றும் பொதுமக்கள் பலர் கேள்வி கேட்டு வந்துள்ளனர். ரிசர்வ் வங்கி பொதுமக்களிடமிருந்து பணம் கேட்டு யாரொருவருக்கும் எப்போதும் மெயில் அனுப்பாது. ரிசர்வ் வங்கியிடம் அந்நிய செலாவணி கையிருப்பு மதிப்பு 36,000 கோடி டாலர் அளவுக்கு உள்ளது. 8 லட்சம் கோடி மதிப்புக்கு அரசின் கடன் பத்திரங்கள் உள்ளன. அதனால் பொதுமக்களின் பணம் ரிசர்வ் வங்கிக்கு தேவையில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

போட்டியில் வெற்றி பெற்றுள்ளீர்கள் என்றோ, லாட்டரில் பரிசு விழுந்திருக்கிறது, உங்களுக்கு ரூ.50 லட்சம் கிடைக்கும், இதற்கான பரிவர்த்தனை செலவுகளுக்கு ரூ.20 ஆயிரம் அனுப்பி வையுங்கள் என்று மெயில் வருகிறது. இப்படி வந்தால் யாரும் நம்ப வேண்டாம். சாதாரணமாக ஜங்க் இமெயில் என்று விட்டு விடுங்கள். இதை நம்பி பணம் அனுப்பி ஏமாற வேண்டாம் என்றும் ரகுராம் ராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply