shadow

மீண்டும் ரூ.1000 நோட்டு: இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு

சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி புதிய ரூ.200 மற்றும் ரூ.50 புதிய நோட்டுக்களை புழக்கத்தில் விட்ட நிலையில் விரைவில் புதிய ரூ.1000 நோட்டுக்கள் வெளிவரவுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய ரிசர்வ் வங்கி கூறியபோது, ‘புதிய 1000 ரூபாய் நோட்டில் சில கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெறும் என்றும், புதிய நோட்டுக்கள் டிசம்பர் முதல் வாரத்தில் வெளியாகும். இந்த நோட்டுக்கள் மைசூரு மற்றும் சல்போனியில் அச்சடிக்கப்பட உள்ளது.”

கடந்த ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி ரூ.500 மற்றும் ரூ.1000 செல்லாது என்று பாரத பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த நிலையில் ஏற்கனவே புதிய ரூ.500 வெளிவந்துவிட்ட நிலையில் தற்போது ரூ.1000 நோட்டும் வெளிவரவுள்ளதால் ரூ.2000 நோட்டு குறித்து புதிய அச்சம் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ரூ.2000 நோட்டுக்களை அதிகம் சேமித்து வைக்க பொதுமக்கள் தயங்கி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

 

Leave a Reply