இந்திய ரிசர்வ் வங்கியின் அடுத்த கவர்னர் அறிவிப்பு

இந்திய ரிசர்வ் வங்கியின் அடுத்த கவர்னர் அறிவிப்பு

Urjit-Patelஇந்திய ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக உர்ஜித் பட்டேல் நிய்மனம் செய்யப்பட்டுள்ளார். இதுவரை துணை கவர்னராக பணிபுரிந்து வந்த இவர் வரும் செப்டம்பர் 4ஆம் தேதி முதல் கவர்னர் பதவியை ஏற்கிறார். துணை கவர்னர், கவர்னர் ஆவது இது 8வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருக்கும் ரகுராம் ராஜனின் பதவிக்காலம் செப்டம்பர் மாதம் 4-ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளதை அடுத்து புதிய கவர்னரை தேர்வு செய்ய பலர் பரிசீலிக்கப்ப்ட்டனர் அவர்களில் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியம், நீதி ஆயோக் துணைத் தலைவர் அரவிந்த் பனகரியா, ரிசர்வ் வங்கி முன்னாள் துணை ஆளுநர் ராகேஷ் மோகன், பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா, பொருளாதார விவகாரத்துறை செயலர் சக்திகாந்த தாஸ் ஆகியோர்களும் அடங்கும்.

இந்நிலையில் உர்ஜித் பட்டேல் அடுத்த கவர்னர் என மத்திய அரசு நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்ற உர்ஜித், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் கடந்த 1986-ஆம் ஆண்டு எம்.பில் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.,

Leave a Reply