shadow

சிசிடிவி பதிவுகளை ஒப்படைக்க வங்கிகளுக்கு ஆர்பிஐ அதிரடி உத்தரவு

பாரத பிரதமர் நரேந்திர மோடி கடந்த நவம்பர் 8ஆம் தேதி ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற அறிவிப்புக்கு பின்னர் கள்ள நோட்டு, மற்றும் கருப்புப்பண முதலைகள் தங்களிடம் உள்ள கணக்கில் வராத பணத்தை பல்வேறு முறைகளில் வெள்ளையாக மாற்றி வந்ததாக வெளிவந்த செய்திகளை பார்த்தோம். இவர்களுடைய முறைகேடான முயற்சிக்கு ஒருசில வங்கி அதிகாரிகள் உடந்தையாக இருந்தனர் என்பது கொடுமையிலும் கொடுமை

இந்நிலையில் சமீபத்தில் ஒருசில வங்கி அதிகாரிகள் கருப்பு பணத்தை மாற்ற உதவியாக கைது செய்யப்பட்டு சிபிஐ அதிகாரிகளால் விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நவம்பர் 8 முதல் 30 தேதி வரையிலான சிசிடிவி பதிவுகளை வங்கிகள் பத்திரமாக வைத்திருக்க வேண்டும் என்றும் ஆர்பிஐ அதிகாரிகள் கேட்கும்போது ஒப்படைக்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இதனால் பழைய கரன்சிகளை முறைகேடாக மாற்றிய வங்கி அதிகாரிகள் இன்னும் பிடிபட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply