ரேஷன் கடை ஊழியர்கள் – கூட்டுறவு சங்க பதிவாளர் அதிரடி!

தமிழகம் முழுவதும் 34,777 ரேஷன் கடைகள் மூலம், 6.96 கோடி பயனாளிகளுக்கு மாதந்தோறும் பொருட்கள் விநியோகம் செய்ய, 244 கிடங்குகள் செயல்பட்டு வருகின்றன.

ஒரு சில இடங்களில், பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி தரமற்று இருந்ததாக புகார்கள் கிடைத்துள்ளது.

இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை கூட்டுறவுத்துறை மேற்கொண்டு வருகிறது.

ரேஷன் கடைகளில் தரமற்ற பொருட்கள் கண்டறியப்பட்டால் அதனை மீண்டும் கிடங்குகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அத்துடன் தரமற்ற பொருளை தனியாக எடுத்து வைக்க வேண்டும்.