கொரோனா நேரத்தில் இது தேவையா?

ஒடிசாவில் உள்ள பூரி ஜெகநாதர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ரதயாத்திரை மிக விசேஷமாக நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டும் ஜூன் 23ஆம் தேதி ரதயாத்திரை நடத்த முடிவு செய்யப்பட்டது

இந்த விழாவுக்காக ரதம் செய்யும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளதாக கோவிலின் அலுவலக நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார். இதற்கான பணிகளில் 72 பணியாளர்கள் செய்து வருவதாகவும் இதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு பரபரப்பாக இருக்கும் இந்த நேரத்தில் ரத யாத்திரை போன்ற திருவிழாக்களை நடத்த வேண்டுமா? என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்

ஜூன் 23ஆம் தேதிக்கு இன்னும் ஒரு மாதத்திற்கு மேல் இருந்தாலும், அதற்குள் கொரோனா கட்டுக்குள் வரும் என்று எந்த உத்தரவாதமும் இல்லை என்றும் இதனால் இந்த ரதயாத்திரையை ரத்து செய்ய வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்

Leave a Reply