shadow

தளபதி விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 66’ படத்தை தயாரிக்கும் ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த படத்தின் நாயகி ராஷ்மிகா மந்தனா என அறிவித்துள்ளது.

இன்று ராஷ்மிகா மந்தனா தனது பிறந்த நாள் என்பதும், பிறந்த நாளில் அவருக்கு பிறந்த நாள் பரிசாக தளபதி விஜய் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய ஜாக்பாட் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே கார்த்தியின் சுல்தான் படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்திருந்தார் என்பதும், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகை இவர் என்பது தெரிந்ததே.