காட்மேன் விவகாரத்தில் கொந்தளித்த ரஞ்சித் மற்றதற்கும் கொந்தளிப்பாரா?

 நெட்டிசன்கள் கேள்வி

காட்மேன் வெப் தொடரில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருந்ததால் அந்த தொடரை தடை செய்ய வேண்டும் என போலீசில் புகார் அளித்ததை அடுத்து இந்த தொடரின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

இந்த நிலையில் இந்த தொடரை ஒளிபரப்ப போவதில்லை என ஜீ5 நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது

இந்த நிலையில் இந்த தொடருக்கு எதிராக புகார் அளித்தவர்கள் குறித்தும் இந்த தொடரை நிறுத்திய ஜி5 நிறுவனம் குறித்து இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள் தனது டுவிட்டரில் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்

இந்த ட்விட்டில் அவர் கூறியதாவது: காட்மேன், @ZEE5India தொடரின் முன்னோட்டத்தை ஒட்டி, அந்த தொடரின் தயாரிப்பாளர், இயக்குனர்&நடிகர் மீது அவதூறுகள் பரப்பியும், அச்சுறுத்தியும், பொய்வழக்குகள் தொடுக்கும் சமூக விரோத சனாதன கும்பல்களுக்கும், துணை நிற்கும் தமிழக காவல் துறைக்கும் வண்மையான கண்டனங்கள்

இந்த தொடரை தயாரிப்பதில் உறுதுணையாக இருத்துவிட்டு, பிரச்சனை வந்தவுடன் , காட்மேன் தொடரின் குழுவினரை பாதுகாக்க தவறிய @ZEE5India நிறுவனத்தாரின் இச்செயல் ஏற்ப்புடையது அல்ல!!!மேலும் இத்தொடரை வெளியிட உரிய நடவடிக்கை மேற்கொள்க!!

இந்த நிலையில் இதே போன்ற ஒரு தொடர் வேறு மதத்தை அவமதிக்கும் வகையில் எடுத்திருந்தால் இதேபோல் பா ரஞ்சித் பொங்கி இருப்பாரா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்

Leave a Reply