பா.ரஞ்சித் தயாரிக்கும் படத்தின் டைட்டில் அறிவிப்பு

பா.ரஞ்சித் தயாரிக்கும் படத்தின் டைட்டில் அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி மற்றும் ‘காலா’ ஆகிய படங்களை இயக்கி உலக அளவில் பிரபலமான இயக்குனர் ரஞ்சித் தற்போது சொந்த தயாரிப்பு நிறுவனமான நீலம் புரடொக்சன்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் ஒரு திரைப்படத்தை தயாரித்து வருகிறார்.

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டிலை இயக்குனர் ரஞ்சித் தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார். இந்த படத்திற்கு பரியேறும் பெருமாள்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது.

இந்த படத்தை மாரி செல்வராஜ் இயக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கின்றார். கதிர், ஆனந்தி, கலையரசன் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருவதாகவும் இந்த படம் வரும் மார்ச் மாதம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறாது

Leave a Reply

Your email address will not be published.