shadow

மத்திய அரசை குற்றஞ்சாட்டிய மீனவர்களிடம் கமல் அமைதியாக இருந்தது ஏன்?

இன்று மாலை தனது புதிய கட்சியின் பெயரை அறிவிக்கவிருக்கும் கமல், சற்றுமுன்னர் ராமேஸ்வர மீனவர்களை சந்தித்து அவர்களுடைய குறைகளை கேட்டறிந்தார்/

அப்போது பெரும்பாலான மீனவர்கள் மத்திய அரசை குறைகூறினர். இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜிடம் தெரிவித்தபோது, தயவு கூர்ந்து அந்தப் பகுதியில் மீன்படிக்க வேண்டாம் என்று தான் கூறினார்களே தவிர, அதற்குண்டான தீர்வுகள் எதுவும் எடுக்கவில்லை என்று மீனவர்கள் கமல்ஹாசனிடம் கூறினார்கள்.

தமிழக அரசை மட்டுமே எதிர்த்து வரும் கமல், இதனை சற்றும் எதிர்பார்க்கவில்லை. இருப்பினும் அவர் மத்திய அரசை மீனவர்கள் குறை கூறியபோது அமைதி காத்தார். மத்திய அரசிடம் தான் இதுகுறித்து பேசுவதாக கூட அவர் தெரிவிக்கவில்லை

மத்திய அரசை குறைகூறினால் வரும் விளைவுகள் குறித்து அறிந்தே கமல் அமைதி காத்து வந்ததாக அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர். கமல்ஹாசன் முதல் நாளே ஒரு தேர்ந்த அரசியல்வாதியாகிவிட்டதாகவே கூறப்படுகிறது.

Leave a Reply