ஊரடங்கு உத்தரவு எதிரொலி: மீண்டும் ஒளிபரப்பாகும் ராமாயணம்

ஊரடங்கு உத்தரவு எதிரொலி: மீண்டும் ஒளிபரப்பாகும் ராமாயணம்

ஊரடங்கு உத்தரவு காரணமாக 24 மணி நேரமும் இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதால் அவர்களுக்கு பொழுது போகும் வகையில் ராமாயணம் சீரியல் மீண்டும் ஒளிபரப்ப தூர்தர்ஷன் முடிவு செய்துள்ளது

கடந்த 1987 ஆம் ஆண்டு முதல் 1988 வரை சுமார் ஒன்றரை ஆண்டுகாலம் ஒளிபரப்பான இந்த சீரியல், நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது. 37 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் இந்த சீரியல் ஒளிபரப்பப்பட உள்ளதால் பொதுமக்கள் மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்

நாளை முதல் தினமும் காலை 9 மணி முதல் 10 மணி வரையிலும் இரவு 9 மணி முதல் 10 மணி வரையிலும் ராமாயணம் சீரியல் ஒளிபரப்பாக ஒளிபரப்பாகும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அவர்கள் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published.