ராமாயணம் எக்ஸ்பிரஸ் ஊழியர்களுக்கு சீருடை மாற்றம்!

ராமாயணம் எக்ஸ்பிரஸ் ரயிலில் உள்ள ஊழியர்களுக்கு சீருடை மாற்றப்பட்டு உள்ளது

அயோத்தி முதல் ராமேஸ்வரம் வரை செல்லும் ரயில் ராமாயண எக்ஸ்பிரஸ் ரயிலில் பணிபுரியும் பணியாளர்களுக்கு காவி நிற சீருடை வழங்கப்பட்டது

இந்த நிலையில் ராமாயணம் எக்ஸ்பிரஸ் ரயில் பணியாளர்களுக்கு காவி நிற சீருடை அளித்ததற்கு துறவிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் தற்போது சீருடை மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

நவீன வசதிகளைக் கொண்டுள்ள ராமாயணம் எக்ஸ்பிரஸ் ரயில் அயோத்தி முதல் ராமேஸ்வரம் வரை மொத்தம் 15 ஊர்களுக்கு செல்கிறது