shadow

பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தமிழிசை நீக்கியது யாரை தெரியுமா?

கிட்டத்தட்ட தமிழில் உள்ள அனைத்து தொலைக்காட்சிகளின் விவாதங்களில் கலந்து கொள்பவர் இராமசுப்பிரமணியன் என்பது அனைவரும் அறிந்ததே. பாஜக ஆதரவாளர், மோடி ஆதரவாளர், சங்கரர் ஆதரவாளர், இந்து மத ஆதரவாளர் என பல்வேறு தலைப்புகளில் இவர் விவாதம் செய்வதுண்டு,

இந்த நிலையில் பாஜக ஆதரவு ஊடக விவாதகர்த்தாவான இராமசுப்பிரமணியன் அவர்களை பாஜகவின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நிரந்தரமாக நீக்கியுள்ளார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் அவர்கள். இந்த நீக்கத்திற்கு என்ன காரணம் என்று இதுவரை தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை

இராமசுப்பிரமணியன் சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் வங்கி மோசடிகளில் புதிய உச்சம் என்ற தலைப்பில் நடந்த விவாதத்தில் கலந்து கொண்டார். அதில் அவர் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply