shadow

முன்னாள் தலைமைச்செயலாளர் ராம்மோகன் ராவ் மருத்துவமனையில் திடீர் அனுமதி.

அரசியல்வாதிகள், விவிஐப்பிகள் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு கைது செய்யப்படும் நிலை வந்தால் திடீரென அவர்கள் மருத்துவமனையில் அட்மிட் ஆகி தப்பித்துவருவது தமிழகத்தில் காலங்காலமாக நடைபெற்று வரும் ஒரு வழிமுறை. இந்த வழிமுறையை தற்போது தமிழகத்தின் முன்னாள் தலைமை செயலாளர் ராம்மோகன் ராவ் கடைபிடித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆம், தமிழக தலைமைச்செயலாளராக இருந்த ராம்மோகன் ராவ் இன்று திடீரென போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அட்மிட் ஆகியுள்ளார். அவர் எந்த நோய்க்காக அட்மிட் ஆகியுள்ளார். அவருக்கு என்ன சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது என்பது குறித்த தகவலை இன்னும் மருத்துவமனை வட்டாரங்கள் வெளியிடவில்லை.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராம்மோகன் ராவ், அவரது மகன் விவேக் மற்றும் உறவினர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தியதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. பலகோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் எந்நேரமும் கைது செய்யப்படும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் இன்று அவர் மருத்துவமனையில் அட்மிட் ஆகியுள்ளார்.

Leave a Reply