ராஜ்யசபா தேர்தலில் பாஜக அமோக வெற்றி!

காங்கிரஸ் கட்சிக்கு 5 இடங்கள்

24 ராஜ்யசபா எம்பி க்கள் பதவிக்கு ஜூன் 19ஆம் தேதி தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்த நிலையில் 5 எம்பிக்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதை அடுத்து நேற்று 19 ராஜ்யசபா எம்பிகளுக்கான தேர்தல் நடைபெற்றது

இந்த தேர்தலில் பாஜக 8 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 5 இடங்களிலும் கைப்பற்றி உள்ளன. அதேபோல் ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு 4 எம்.பி.க்கள் கிடைத்துள்ளனர். மாநில கட்சிகளான என்.பி.பி, எம்.என்.எப். ஆகியவை தலா 1 எம்.பி இடங்களைப் பெற்றுள்ளன.

இந்த தேர்தலில் வெற்றி பெற்ற முக்கியமானவர்களில் பாஜகவின் ஜோதிராதித்ய சிந்தியா, காங்கிரஸின் திக்விஜய்சிங், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் சிபுசோரன், காங்கிரஸ் கட்சியின் கேசி வேணுகோபால் ஆகியோர் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்தியில் ஆளும் பாஜக மற்றும் அதன் கூட்டணி இந்த ராஜ்யசபா தேர்தலில் அபார வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply