shadow

ராஜீவ் கொலையாளியை நான் தான் கொன்றேன். சிபிஐ அதிகாரியின் அதிர்ச்சி தகவல்

rajiv-gandhiராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 25 வருடங்களாக நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேர் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்களில் சாந்தன் என்பவர் உண்மையான குற்றவாளி இல்லை என்றும் உண்மையான சாந்தன் என்பவரை நான் தான் சுட்டு கொன்றேன் என்றும் சிபிஐ அதிகாரி ஒருவர் தனது பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில், சி.பி.ஐ. அடையாளம் காட்டும் நபர்களைப் பிடித்து வரும் ட்ராக்கிங் குழுவில் பணியாற்றியசி.பி.ஐ. ஆய்வாளர் ஜெபமணி மோகன்ராஜ் என்பவர் தனது ஃபேஸ்புக்கில் செய்திருக்கும் பதிவு இதுதான்:

‘விடுதலைப்புலி குண்டு சாந்தனை திருச்சியில் வைத்து விடியக் காலை 04.10 மணிக்கு மூன்று ஆய்வாளர்கள், 7 ரவுண்ட் சுட்டோம். நான் பயன்படுத்தியது .38 ரிவால்வர். மற்றவர்கள் பயன்படுத்தியது 9 எம்.எம். பிஸ்டல். நான் சுட்டது ஒரு ரவுண்ட் மட்டுமே. குண்டு சாந்தன் இருதயத்தைத் துளைத்துச் சென்றது என் துப்பாக்கியில் இருந்து சென்ற குண்டுதான். இது தெரிந்தவுடன் என் நண்பர்கள் என்னைத் தூக்கி வைத்துக் கொண்டாடி மகிழ்ந்தார்கள். லேசாக மழை பெய்து கொண்டிருந்தது. இந்தக் காட்சிகள் இன்னும் எனக்கு பசுமையாக நினைவில் இருக்கிறது. இது கதை வசனம் இல்லை. ஒரு தேசபக்தன், தன்னுடைய தேசத்தின் மானம் காக்க துணிச்சலாகக் கடமை ஆற்றிய சரித்திர நிகழ்வு”  என பெருமையாக பதிவு செய்துள்ளார் ஜெபமணி மோகன்ராஜ்.

ராஜீவ் கொலை வழக்கில் உண்மையில் தேடப்பட்டு வந்த குற்றவாளி, குண்டு சாந்தன்தான். தற்போது சிறையில் இருக்கும் சாந்தன் வெளிநாட்டுக்கு போய் வேலை தேட முறைப்படி விசா வாங்கி விமானத்தில் வந்தவர். கஸ்டம்ஸ்ல இருந்துதான் அந்த சாந்தன் என்கிற பெயரை சி.பி.ஐ கண்டுகொண்டது.  உடனே அப்பாவியான அவரைப் பிடித்து குற்றவாளியாக சேர்த்துவிட்டார்கள். பிறகு, உண்மையான குற்றவாளி குண்டு சாந்தன் சிக்கிய தகவல் தெரிந்தவுடன் உண்மையான சாந்தனை சுட்டு கொலை செய்துவிட்டு ஒரு தவறும் செய்யாத சின்ன சாந்தனை கைது செய்துள்ளதாக தெரிய வருகிறது. இதுகுறித்து மனித உரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

Leave a Reply