ராஜீவ் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவருக்கும் கருணை மனு காலதாமதம் ஆனதால் அவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என மூவரின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் இன்று வாதாடிய அரசு வக்கீல், மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்தார். தண்டனையை குறைக்கும் அளவுக்கு இது சாதாரண வழக்கு இல்லை என்று அவர் வாதாடினார். அவருடைய வாதத்திற்கு பின்னர் இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
அண்மையில் கருணை மனு தாமதம் ஆன காரணத்தால் வீரப்பன் கூட்டாளிகளுக்கு வழங்கப்பட்டிருந்த மரணதண்டனையை, ஆயுள்தண்டனையாக குறைத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது. இதை தொடர்ந்து இவர்கள் மூவருக்கும் வழங்கப்பட்டமரணதண்டனை, ஆயுள்தண்டனையாக குறைக்கபடுமா என்று திர்ப்பு நாளன்று தெரிய வரும்.
Leave a Reply
You must be logged in to post a comment.