shadow

டிஜிட்டலுக்கு மாறுகிறது ரஜினியின் பாட்ஷா

baashaரஜினி நடித்த படங்களில் மிகச்சிறந்த படம் என்று அனைவரும் ஒப்புக்கொள்ளும் வகையில் அமைந்த படம் ‘பாட்ஷா’. இந்த படம் இப்பொழுது தொலைக்காட்சியில் போட்டால்கூட கடைசி வரை உட்கார்ந்து ரசித்து பார்க்க என்றே ஒரு பெருங்கூட்டம் உள்ளது.

இந்த படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து இதன் இரண்டாம் பாகத்தை இயக்க பலமுறை முயற்சி செய்யப்பட்டபோதும் ரஜினி அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இந்நிலையில் இந்த படம் மீண்டும் புத்தம் புதிய பொலிவுடன் வெளிவரவுள்ளதாக கூறப்படுகிறது.

‘பாட்ஷா’ படத்தின் தயாரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பன் விரைவில் இந்த படத்தை டிஜிட்டலுக்கு மாற்ற முடிவு செய்திருப்பதாகவும், புத்தம் புதிய வடிவில் புதிய டெக்னாலஜியில் இந்த படத்தின் விரைவில் மாறவுள்ளதாகவும், அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படம் ரஜினி நடித்து வரும் 2.0 படத்திற்கு முன்பே ரிலீஸ் செய்ய ஆர்.எம்.வீரப்பன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *