இஸ்லாமிய மதகுருமார்களுக்கு ரஜினி அழைப்பு: இன்று சந்திப்பு நடக்குமா?

சமீபத்தில் மத்திய அரசு அறிமுகம் செய்த சிஏஏ என்ற குடியுரிமை சீர்திருத்த சட்டத்துக்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த போராட்டத்திற்கு ஆதரவாக பல அரசியல் கட்சிகள் மற்றும் மாணவர்களும் போராட்டம் செய்து வருகின்றனர்

இந்த நிலையில் கடந்த ஐந்தாம் தேதி செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் சிஏஏ சட்டத்தால் இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுக்கு எந்தவித பிரச்சனையும் வராது என்றும் அப்படி ஒருவேளை பிரச்சனை வந்தால் நான் முதல் ஆளாக குரல் கொடுப்பேன் என்றும் கூறினார்

இது குறித்து இஸ்லாமிய அமைப்புகள் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். ரஜினிகாந்த் இந்த சட்டத்தின் சீரியஸ் குறித்து அறியாமல் பேசுவதாக அவர்கள் தெரிவித்தனர். இதனை அடுத்து இஸ்லாமிய அமைப்பின் பிரதிநிதிகளுடன் ரஜினிகாந்த் போனில் பேசியதாகவும் அதன் பின்னர் நேரில் சந்தித்து சிஏஏ சட்டம் குறித்து ஆலோசிக்க தயார் என்று கூறியதாகவும் தெரிகிறது

இதனை அடுத்து இஸ்லாமிய மதகுருமார்கள் இஸ்லாமிய அமைப்பின் நிர்வாகிகள் ரஜினிகாந்தை இன்று அல்லது நாளை சந்திக்கலாம் என்றும் இந்த சந்திப்பின்போது சிஏஏ சட்டத்தால் ஏற்படக்கூடிய ஆபத்து குறித்து இஸ்லாமியர்கள் ரஜினியிடம் விளக்குவார்கள் என்றும், ரஜினியும் தனது தரப்பு விளக்கத்தை அவர்களுக்கு அளிப்பார் என்றும் கூறப்படுகிறது

Leave a Reply