ஸ்டாலின், அழகிரியுடன் ரஜினிகாந்த் சந்திப்பு

ஸ்டாலின், அழகிரியுடன் ரஜினிகாந்த் சந்திப்பு

திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஐந்து நாட்களாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் நேற்றிரவு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.

திமுக செயல் தலைவர் ஸ்டாலின், மற்றும் அழகிரி, கனிமொழி ஆகியோர்களை தனித்தனியே சந்தித்த ரஜினிகாந்த், கருணாநிதியின் உடல்நிலை அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகளை கேட்டறிந்தார்

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், ‘இந்திய அரசியலின் மூத்த தலைவரான கருணாநிதி உடல்நலம் சீராக இருப்பதாக் ஸ்டாலின், அழகிரி , கனிமொழி ஆகியோர்கள் கூறினார். அவர் விரைவில் குணமாக எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்’ என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.