shadow

11 copyஆந்திராவில் இருந்து பிரிந்து சீமாந்திரா, தெலுங்கா என இரண்டு மாநிலங்கள் உருவான பின்னர் சீமாந்திராவில் நடந்த சட்டமன்ற தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் அபார வெற்றி பெற்றது. இதையடுத்து சந்திரபாபு நாயுடு நாளை முதல்வராக பதவியேற்கவுள்ளார்.

இந்த பதவியேற்பு விழாவுக்காக  70 ஏக்கர் இடத்தில் அலங்கார பந்தல் அமைக்கப்பட்டுள்ளதாகவும், போக்குவரத்து வசதிகள், அரசியல் மற்றும் திரையுலக பிரமுகர்கள் தங்க பிரத்யேக ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விழாவில் கலந்துகொள்ள ஏற்கனவே தமிழக முதல்வர் ஜெயலலிதா கலந்துகொள்ள விருப்பம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது பிரதமர் நரேந்திர மோடியும் விழாவுக்கு வருகிறார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சந்திரபாபு நாயுடுவின் நெருங்கிய நண்பரும் சூப்பர்ஸ்டாருமான ரஜினிகாந்தையும் இந்த விழாவுக்கு அழைத்துள்ளனர்.  ரஜினிகாந்த் மற்றும் தெலுங்கு நடிகர் பவன் கல்யான் ஆகியோரை சந்திரபாபு நாயுடு தனிப்பட்ட முறையில் தொலைபேசி வாயிலாக அழைத்ததாகவும், அவர்களும் விழாவுக்கு வருகை தர ஒப்புக்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மோடி பதவியேற்பு விழாவுக்கு ராஜபக்சே வருகை காரணமாக செல்லமுடியாத ரஜினிகாந்த், இந்த விழாவில் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிப்பார் என கூறப்படுகிறது.

Leave a Reply